வாழ்த்துரை – முனைவர் பட்டம் பெறத்தக்க அரிய நூல்…

இந்நாட்டை ஆண்ட மன்னர்களால், தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்குமாக சிவன், திருமால், சக்தி, கணபதி, முருகன் ஆகிய பெருந்தெய்வங்களுக்கான ஆகமக் கோயில்கள்; கட்டப்பட்டுப் பெருமையோடு இன்றும் விளங்கி வருகின்றன.

இத்தெய்வங்களுக்கான மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றின் பெருமைகளைக் கூறும் தலபுராணங்கள் காலங்காலமாக திருத்தொண்டர்களால்  பாடப்பெற்று நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளும், தாமிரப் பட்டயங்களும், ஓலைச் சுவடிகளும் இத்தலபுராணங்களுக்கு ஆதாரமாய்;; விளங்குகின்றன.

தேவாரம் பாடிய மூவராலும் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்), திருவாசகம் பாடிய மாணிக்கவாசகராலும் சிவாலயங்கள் இன்றைக்கும் பாடல் பெற்ற தலங்களாக பெருமை பெற்றிருக்கின்றன. இதே போல் திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களான பெருமாள் கோயில்களும் 12 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டு பொழிவுடன் காணப்படுகின்றன.

ஆனால், சிறுதெய்வங்கள் என்றும் நாட்டார் தெய்வங்கள் என்றும் கிராம தேவதைகள் என்றும் வணங்கப்படுகின்ற, வழிபடப்படுகின்ற தெய்வங்களுக்கான வரலாறுகள் செவிவழிக் கதைகளாக மக்களால் காலங்காலமாகப் பேசப்பட்டிருக்கின்றவே அன்றி, இவை ஆவணங்களாகப் பதிவு செய்யப்படவில்லையே எனும் ஏக்கம் கற்றோர் மனதிலும் மற்றோர் மனதிலும் இருந்து வந்தது.

இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வண்ணம் ஓர் அரிய ஆவண நூலைப்பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும்’  எனும் தலைப்பில் பல்லாண்டு காலம் கல்விப் பணியில் சாதனைகள் படைத்த புலவர் .சின்னன் ஐயா அவர்கள் 250 பக்க நூலாகத் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். ‘மண்ணுக்குள் மறைந்து கிடந்த மாணிக்கங்களை, வைரங்களைக் கண்டெடுத்துப் பட்டை தீட்டி ஒளிவீசச் செய்வதுபோன்ற இவரது இப்பணி போற்றுதற்குரியது

உசிலம்பட்டி வட்டாரப், பாப்பாபட்டி கீரிப்பட்டி ஆகிய சிறிய கிராமப்பகுதியில் பிறந்து, கல்வியால் உயர்ந்து, அரசு ஆசிரியராய்ச் சிறந்து விளங்குபவர் தான் இந்நூலாசிரியர்; புலவர் .சின்னனன் ஐயா. இவரது திருக்குமாரர்தான் வருமான வரித்துறையின் ஆணையர் திரு. சி.அருண் பாரத் .சு.ளு. அவர்கள். இவர் வருமானவரித்துறையில் பணிபுரிந்தாலும் இவரும் ஒரு நூலாசிரியரே. படைப்பாற்றல் மிக்க இப்பாரம்பரியக் குடும்பத்தாருக்கு ஒச்சாண்டம்மனும் ஆச்சி ஆண்டாயும் என்றென்றும் துணை நிற்பார்கள். இனிப் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும் எனும் இந்நூல் குறித்துக் காண்போம்.

இந்நூல் கள ஆய்வு நூலாக (குநைடன றழசம வாநளளை) ஆய்வு செய்யப்பட்டுத் தகுந்த ஆதாரங்களோடும், தகுதி மிக்க தெய்வ வழிபாட்டுப் பூசாரிகளின் வாய்மொழிகளோடும், அரிய நிழற்படங்களோடும் தொகுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பாகம்-1 பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் தோற்றம்

பாகம்-2 மாசிப் பச்சை மகா சிவராத்திரி திருவிழா நடைமுறை

பாகம்-3 எட்டு, இரண்டு, பத்துத்தேவர்கள் வாழ்வும் வழிபாடும் எனும் மூன்று பெரும் பாகங்களைக் கொண்டதாகத் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் தோற்றம்  எனும் முதல் பகுதியில் பிறமலைக் கள்ளர்களுடைய பழமையான வரலாறும் கருமாத்தூர் எல்லையும் அவ்வூரின் குலதெய்வங்களும் அறிமுகம் செய்யப்பட்டு இந்நூலை வாசிப்போரை அந்த இடங்களுக்கே அழைத்துச் செல்கிறார் ஆசிரியர் சின்னையா.

குலதெய்வங்களின் வரலாறுகளைக் குறிப்பிடுகிறபோது பக்தியோடும், பணிவோடும் விவரிக்கும் இந்நூலாசிரியரின் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. தடியத்தேவன், நொச்சாயி என்ற ஒச்சாயி ஆகியோர்  வாழ்க்கையில் நடந்த அதிசயமும் அசரீரி வாக்கும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

வடகிரி, தென்கிரி எனும் குழந்தைகளும் கணவனை இழந்த அவர்களின் தாயும் பின்னர் அவர்களின் பிரிவும் நம் நெஞ்சைப் பதற வைக்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள் எவ்வாறு வடபத்ரசாயி என்னும் திருமாலுக்கு பூமாலைகட்டிச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகப் பெருமை பெற்றாளோ, அதுபோல ஆண்டாயி என்னும் அம்மையின் பிறப்பும், வளர்ப்பும், பகாத்தேவன் ஆண்டாயி ஆகியோரின் திருமணமும், ஆண்டாயிக்கேற்பட்ட தெய்வ அருள்நிலையும் விரிவாகச் சொல்லப்படுவதோடு ஓர் அற்புதமும் ஆசிரியரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

 ‘ஒரு முறை திருவிழாவின் போது கோபம் கொண்ட ஆண்டாயி அம்மைபொங்கல் வைக்கின்ற கொதிபானையைக் கையில் தூக்கி ஆவேசமாய் ஓடி வந்த போது அக்கோவில் சுவர் இடிந்து அவ்வம்மைக்கு வழிவிட்ட நிகழ்ச்சியைக் கூறும் ஆசிரியர், அக்கோவில் வாசல் இன்றைக்கும்   அடைபடாமல் இருக்கும் நிலையையும் புகைப்படத்துடன் பதிவு செய்து பரவச நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாருக்கு ஒச்சாண்டம்மனை காட்சிப்படுத்திய ஆண்டாயி அம்மனின் அருட்செயலையும,; ஜமீன்தார் பெற்ற பயனையும் கூறும் ஆசிரியர் ஆண்டாயி அம்மாளின் அருமை பெருமைகளைப் பகாத்தேவனும், ஊராரும் அறியும் நிலையும் பூசாரிகளின் செயல்பாடும், பூசைப்பெட்டிகளின் தெய்வீகத் தன்மையும் இம்முதல் பகுதியில் குறும்படம் போல நமக்குக் காட்டுகிறார் நூலாசிரியர் சின்னனன் ஐயா.

மாசிப் பச்சை மகா சிவராத்திரி திருவிழா நடைமுறை எனும் இரண்டாம் பாகத்தில் மதுரைச் சித்திரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா போன்று மாசிப்பச்சை மகா சிவராத்திரி திருவிழாவின் நடைமுறைகளையும் ஆசிரியர் வருணனை செய்யும் காட்சி உற்று நோக்கத்தக்கது.

திருவிழாத் தொடங்குவதற்கு முன்பாக ஊர்கூட்டம் போடுவதற்காகக் கடிதம் எழுதும் முறை, சபை கூடும் வழக்கம், விழா எடுக்கச் சம்மதம் கேட்டல், சிலைகள் செய்ய அனுமதி, தலைக்கட்டு வரி, பிரமதாள பிரம்பனுக்கு முன்னறிவிப்புக் கொடுத்து சந்தனம், பாக்கு, வெற்றிலை வைத்து திருவிழாவை சிறப்பிக்க வேண்டுதல், அரசு அலுவலகங்களுக்கு அறிவித்தல், பூசைப்பெட்டிக்கு சக்தி நிறுத்தும் வழிபாடு செய்தல் என அனைத்து முறைகளையும் வரிசைப்படுத்தும் ஆசிரியர் விடியற்காலைச் சோறு, (முளைகட்டிய பிதுக்குப்பருப்போடு, புளியும் பல்வகைக் காய்கறிகளும், நெய்யும் கலந்த சுடுசோறும்) பற்றி விவரிக்கும் போது படிக்கும் நமக்கே அச்சோறை உண்ண வேண்டும் என்னும் ஆசை எழும்.

பின்னர் பூசைப்பெட்டிகளுடைய புறப்பாடும் கீரிப்பட்டியில் வரவேற்பும் திம்மனத்தம் இலந்தோப்பில் சாமியாட்டமும், உப்பிலிபட்டி வரவேற்பும், பாப்பாபட்டி தெய்வச்சிலை எடுத்தலும், பூசாரிகளின் பூசை முறையும், பத்துத் தேவர்களின் பவனியும், வானவேடிக்கையும், விழா முடிவில் வழியனுப்பும் நிகழ்ச்சியும் ஆசிரியரின் வருணனைகளோடும் ஆங்காங்கே அவர் கூறும் கிளைக் கதைகளோடும் அதற்கேற்ற புகைப்படங்களோடும் அமைந்துள்ள இந்நூல் ஒரு தெய்வீக வரலாறு என்பதில் ஐயமில்லை.

மூன்றாம் பாகமாகிய எட்டு, இரண்டு, பத்துத்தேவர்கள் வாழ்வும் வழிபாடும் எனும் பகுதியில,; பெரிய தேவர், ஒய்யாத் தேவர் வகையறா, மோலத் தேவர் வகையறா என தேவர்களின் வம்சா வழியை விவரிப்பதோடு அக்கிராமப் பகுதிகளில் வாழ்கின்ற குடும்பமார்கள் போன்ற பிறசாதி மக்களை அண்ணன், தம்பிகளாக அரவணைத்துச் செல்லும் பாங்கினையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

மேலும் வேளாண்மைக்குப் பயன்படுமாறு கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரினை மடைகள் வழியாக நீர்ப்பாசனத்துக்கு கொண்டு செல்ல உதவும் நீர்மடை காக்கும் தொழிலாளர்களுக்கும், மடையன் மானியம் தரப்படும் செய்தியினையும் நினைவு கூர்கிறார் ஆசிரியர்.

சுளிஒச்சாத்தேவர், கட்டக்காளைத் தேவர், உடையாத் தேவர் ஆகியோரின் வாழ்வும் வரலாறும் ஆதாரங்களோடு இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

காரள வெள்ளாளர்கள், கம்மாளர்கள் போன்ற இனத்தாரையும் குறிப்பிடும் ஆசிரியர் அங்காள பரமேஸ்வரி, வீரகால அய்யன், பொம்மைப் பேச்சி, பெரிய சீலைக்காரி, சின்னச் சீலைக்காரி, பட்டவன், வடக்குவாசல் செல்வி எனப் பல்வேறு தெய்வங்களைப் பட்டியலிட்டு, ‘வாட்ஸ் அப், பேஸ் புக், டுவிட்டர்என விஞ்ஞான யுகத்தில் வாழும் இளைய தலைமுறைக்கு நினைவூட்டும் ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. இந்நூலுக்குச் சிகரம் வைத்தாற் போல அமைந்திருப்பது எது தெரியுமா? ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த அதிசயச் சம்பவங்களும் அந்நிகழ்வுகளை நெகிழ்வோடு எடுத்துரைக்கும் ஆசிரியரின் நேர்த்தியும் தான் (பக்கம் 160) இப்பக்கங்கள் படித்து இன்புறத்தக்கன, மெய்சிலிர்க்கத்தக்கன. கோயில் தொடர்பான வழக்குகளில் இவ்வாசிரியர் மனங்கலங்கி நின்றபோது

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப

எனும் தொல்காப்பிய இலக்கண நூலின் கூற்றுக்கு ஏற்றபடி குலதெய்வம் தோன்றி அவ்வழக்குகளில் இவர் வெற்றிவாகை சூடுமாறு செய்த நிகழ்வு இந்த நூற்றாண்டின் அற்புதம். இந்நூலின் பிற்பகுதியில் பல அரிய செய்திகள் காணப்படுகின்றன.

       மரபுவழி பெருமக்களின் வாழ்வும் வரலாறும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

       நிறைவாகப் பாப்பாபட்டி பெரிய கோயிலுக்குச் செல்லும் வழித்தடங்களை இன்றைய பு.P.சு.ளு. (புநநெசயட Pயஉமநவ சுயனழை ளுநசஎiஉந) முறையில் வரைபடமாக இந்நூலின் பிற்பகுதியில் ஆசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது.

       245 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் படித்து முடிக்கிறபோது சோழ நாட்டில் தொடங்கி பாண்டி நாட்டில் நிறைவுறும் பல்லாண்டு கால உண்மை வரலாறும், தெய்வ வழிபாடும,; முன்னோர்களின் பழக்கவழக்கங்களும், கிராம சபைகளின் பணியும், கூட்டு வாழ்க்கையும் அனைத்து சாதியினரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.

       அமெரிக்காவிலும், லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும், அரபு நாடுகளிலும் பணியாற்றச் சென்றிருக்கும் இம்மண்ணின் குலவிளக்குகளான இளையதலைமுறையினர் அறிய வேண்டிய ஆவணம் இந்நூல்.

இந்நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கு இந்நூலின் செய்திகளை ஒரு மேற்பார்வையாளரின் உதவியோடு (பரனைந) பதிவு செய்து தந்திருந்தால் நிச்சயம் முனைவர் (னுழஉவழசயவந) பட்டம்  பெற்றிருப்பார். இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

தம் குல தெய்வத்தின,; குல முன்னோர்களின் வரலாற்றை இடைவிடாது பயணித்து, சேகரித்துப் பதிவு செய்து நூலாக்கிய இந்நூலாசிரியர் புலவர்..சின்னனன் ஐயா அவர்கள் உண்மையில் பெரிய அண்ணன் தான்.

இப்பணி செய்திட இறைவன் இவரைப் பணித்திருக்கிறான் இவரும்; உழைத்திருக்கிறார் வெற்றி பெற்றிருக்கிறார் வாழ்த்துக்கள்.

பிற்காலச் சந்ததியினர் எவரேனும் இந்நூலை அடிப்படையாக வைத்து ஆவணப் படமாக, செய்திப் படமாக புகழ்பெற்ற நடிகர்களை வைத்துத் திரைப்படமாக உருவாக்க இந்நூல் கைகொடுக்கும், வழிகாட்டும். தொடரட்டும் இவரது எழுத்துப்பணி. தெய்வங்கள் உயிர் பெறட்டும். உலகம் செழிக்கட்டும்.

மதுரை – 05.09.17                                                                             அன்புடன்                    கு.ஞானசம்பந்தன்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.