பிறைநூறு கண்ட நூ(வே)லாயுதம்…

ஆலைநூல்களால் பெருமை பெற்றது கோவை மாநகரம். அந்நூல் ஆடையாகமாறி மானங்காக்கும். அதுமட்டுமல்லாமல் நன்னூல் எனும் இலக்கணநூல் கூறுவதுபோல மரத்தின் கோணல்களை, வளைவுகளை நேராக்கப் பயன்படும் நூல்போல, மனிதமனத்தின் குறைபாடுகளைப் போக்குகின்ற தன்மை புத்தகமாகிய நூல்களுக்;குத்தான் உண்டு என்பதை,

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்

புரத்தின் வளமுருக்கிப் பொல்லாமரத்தின்

கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர்

மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு.

நன்னூல் என்னும் இலக்கணநூல் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். இத்தகைய பெருமையை புத்தகங்களாகிய நூல்களாலேயே மானுடவர்க்கம் அடைகிறது என்பதை யாவரும் அறிவோம்.

நூல்களால் தன்னை உயர்த்திச் சமுதாயத்திற்கும் சேவை செய்து வரும் ஒரு மனிதர் யார் தெரியுமா? கோவை மாநகரின் அடையாளமாகத் திகழ்பவரும், மணிவிழாக் கண்ட நாயகரும், தற்போது அமுதவிழாக் (சதாபிN~கம்) காண்கின்றவருமாகிய விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் ஐயா மு.வேலாயுதனார்தான்.

நூல்களால் இவர் பெருமைபெற்றதும், நூல்களை இவர் பெருமைபடுத்தியதும்தான் இவரின் வாழ்க்கை நிகழ்வுகள்.

தன் வாழ்நாளில் இளமைப்பருவம் வரை இரயிலையே கண்டறியாத மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகேயுள்ள உலகநாதபுரத்தில் பிறந்தவர் இம்மாமனிதர். இன்று உலகநாதபுரம் உலகோரால் பேசப்படுவதற்கு இவரும் ஒரு காரணம். 1941இல் இவர் பிறந்ததென்னவோ அடிமை இந்தியாவில்தான். ஆனால் நாம் சுதந்திரம்பெற்று பவளவிழா காணுகின்ற இந்நேரத்தில் நம் ஐயா அவர்கள் அமுதவிழா (சதாபிN~கவிழாகாண்கிறார் என்பதே பெருமையான ஒன்று.

உழைப்பும், படிப்பும் இவரது கண்கள். பள்ளிக்குத் தன் தோழர்களோடு மூன்று நான்கு மைல்கள் நடந்து செல்லும்போது இவர் தன் தாயிடம் கேட்ட கதைகளையும், அணில், டமாரம் போன்ற சிறுவர்களுக்கான நூல்களில் படித்த செய்திகளையும் நடைவழிப் பயணத்தில் அவர்களுக்குக் கூறிக்கொண்டே செல்வாராம். அதுவே அவருக்கு வாழ்க்கையின் வழியாக அமைந்ததுதான் அருமை.

கோவைக்கு நான் செல்லுகிற போதெல்லாம் என் உறவினர்கள் வீட்டுக்குச் செல்கிறோனோ இல்லையோ, விஜயா பதிப்பகத்திற்குச் செல்லாமல் நான் வந்ததில்லை. ஐயா அவர்களோடும் விஜயா பதிப்பகத்தோடும் எனக்கு முப்பது ஆண்டுகாலத் தொடர்பு உண்டு.

தமிழகத்தில் இன்றைக்கு பபாசியும் (டீயியளi) ஈரோடு புத்தகத்திருவிழாவும் கொடிகட்டிப் பறக்கின்றன என்றால் இவற்றுக்கெல்லாம் கால்கோளிட்டவர் விஜயா பதிப்பகம் வேலாயுதனார்தான். இது உண்மை வெறும் புகழ்;ச்சியில்லை.

கோவைக்கு திரு. வேலாயுதம் அவர்கள் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கிறபோதெல்லாம் இரயில் நிலையத்திலேயே வந்து வரவேற்பதும், தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், உடனிருந்து விருந்துண்பதும் நான் ஊர் திரும்புகிறபோது கைநிறைய நூல்களைத் தந்து அனுப்புவதும், அவரது அன்பிற்கோர் எடுத்துக்காட்டு.

இன்றைக்கு அவர் முதுமை நிலையில் இருந்தாலும் அவரது திருக்குமாரர் திரு.வே.சிதம்பரம் அவர்கள் இப்பணியை தொடர்ந்து வருகிறார் என்பது அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைகளில் ஒன்று.

மேலும் கோவையில் நான் வேறு நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் பார்வையாளர்களின் முதல்வரிசையில் இருந்து நிகழ்ச்சியை இரசித்துவிட்டு, மேடைக்கு வந்து எனக்குப் பொன்னாடையும் அணிவித்து, வழக்கப்படி புதிய நூல்களையும் தந்து, ‘வேறு ஏதாவது உங்களுக்குத் தேவை இருக்கிறதா?’ என்று அவர் கேட்கும்போதெல்லாம் எனக்கு இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும்.

எழுத்தாளர் மறைந்த சுஜாதா அவர்களை நான் சென்னையில் காணச்செல்லுகிறபோதெல்லாம் எங்களுடைய பேச்சின் நடுவே விஜயா பதிப்பகமும் ஐயா வேலாயுதம் அவர்களுடைய பெயரும் பலமுறை வந்து போகும்.

ஐயா அவர்களின் மணிவிழா மலரில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் கோவைநகரைக் கோலாகல நகராகப் புத்தகக் கண்காட்சிகளின் மூலம் மாற்றிக்காட்டியவர் திரு. வேலாயுதனார் என்பதை மிக அழகாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நான் எழுதியவாங்க சிரிக்கலாம்தொடங்கி, ‘பேசும் கலைவரை ஒன்பது நூல்களை ஐயா அவர்கள் தன்னுடைய பதிப்பகத்திற்காகப் பெற்றுக்கொண்டதோடு அதற்கான நல்ல தொகையினையும் அவர் எனக்குத் தந்து உதவினார்.

2008ஆம் ஆண்டு எங்கள் மகளின் திருமணவிழா மதுரையில் உலகநாயகன் கலைஞானி கமல்ஹாசன், இறையன்பு ..எஸ், குன்றக்குடி அடிகளார் போன்ற பெருமக்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஐயா அவர்கள் மேடைக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தியதோடு நல்ஓவியத்தையும், நல்ல நூல்களையும் மணமக்களுக்குப் பரிசாகத் தந்தார்.

மேடையிலிருந்த சிறப்பு விருந்தினர்கள் அத்தனை பேர்களுக்கும் அவர் நூல்களைப் பரிசாகத் தந்தார். அவர்கள் அனைவரும்; தங்கள் நூல்களையும் பதிப்பித்த பெருமை ஐயா வேலாயுதம் அவர்களுக்கு உண்டு என்பதை வாழ்;த்துரையின்போது மகிழ்வோடு எடுத்துரைத்தார்கள்.

நான் எழுதியபேசும் கலைஎன்னும் நூல் பல்வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கும் பெருமை, விஜயா பதிப்பகத்திற்கும் பெருமை. மேலும் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, காந்திகிராமப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இப் பேசும் கலை பாடநூலாக வைக்கப்பட்டபோது நான் திரு.சிதம்பரம் அவர்களுக்குத் தொலைபேசியில் இச்செய்தியை அறிவிப்பேன். உடனடியாக அவரும் அந்தந்தக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அவற்றை அனுப்பிவைக்கும் பணியினைச் சிறப்புடன் செய்து முடிப்பார்.

தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றாகிய விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு.வேலாயுதனார் அவர்களுக்கென்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு என்றால் என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு நல்லவாசகர், இடைவிடாத படிப்பாளி, புதிதாக வந்திருக்கக்கூடிய எந்த நூலைப் பற்றிக்கேட்டாலும் அந்த நூல் குறித்த சிறு முன்னோட்டத்தை நூலை வாங்குகிறவருக்குச் சொல்லி அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் ஓர் அருங்குணம் படைத்த பண்பாளர் அவர் என்பதே அவரின் தனிச்சிறப்பு.

அவர் படைப்பாளியாக திகழ்ந்தாரா என்பதைக் காட்டிலும் படைப்பாளர் பலரை ஊக்குவித்தார், ஆதரித்தார், பொருள்தந்து உதவுவார். கோவைக்கு வருகின்ற எழுத்தாளர்களை, படைப்பாளர்களை உடனிருப்பார், உபசரிப்பார் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறது என்றால் அத்தகைய பெருமையும் அவரது குணங்களில் ஒன்று என்பதை நாம் அறியவேண்டும்.

2001ஆம் ஆண்டு மணிவிழா கண்ட இந்நாயகர் அமுதவிழாவாகிய சதாபிN~கவிழாவை இன்று கொண்டாடுகின்றார். அப்போதும் ஒரு மலர் வந்தது, இன்றும் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்போதும் ஒரு மலர் வருகிறது, இம்மலரின் வாசம் ஐயா வேலாயுதனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் தாண்டி மணம் பரப்பும்  என்று மகிழ்வோடு கூறுவோம். அவரது ஆசியினைப் பெற்றுக்கொள்வோம். ஐயா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

 பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழவேண்டும்என்ற வாழ்த்தினை என் குடும்பத்தாரோடு சேர்ந்து மகிழ்வோடு கூறுகிறேன்.

மீண்டும் நூற்றாண்டு விழா மலரில் சந்திப்போம்.

அன்புடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.                     

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.