ஏலியன்களைச் சந்திப்போம்….

ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கிய உலகில் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், மருத்துவம் எனப் பல்வகையான களங்களைக்கொண்ட நூல்களைப் படித்திருக்கிறோம், படித்து வருகிறோம்.

தமிழ் இலக்கியங்களில், பக்தி நூல்களில் அறிவியல் குறித்த செய்திகள் இருந்தாலும் அவை தனியாக ஆராயப்படுவதில்லை. செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கியம் உரைநடை வடிவுக்கு வந்தபிறகு தமிழில் புதிய களங்கள் பல தோன்றின. மொழி பெயர்ப்பு, அறிவியல், வானவியல், மின்னனுவியல் என விரிந்த களங்களில் நூல்களைப் படைப்பாளிகளும், ஆராய்ச்சியாளர்களும் தமிழ் மொழிக்குக் கொண்டுவந்து பெருமை சேர்த்தனர்.

          இவ்வகையில் அறிவியல் நூல்கள் குறித்த செய்திகளை எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் எழுதத்தொடங்கியதால் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழாக இருந்த தமிழ், அறிவியல் தமிழாக, கணிணித்தமிழாக வளர்ந்து கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமையே.

          அறிவியல் மற்றும் வானவியல் பற்றிய செய்திகள் குறிப்பாக அயல் கிரகத்து மனிதர்கள் (ஏலியன்ஸ்) பற்றிய நூல்கள் தமிழில் மிகக்குறைவு. அக்குறையைப் போக்கும் வண்ணம் பாளையங்கோட்டை சங்கமித்ரா பதிப்பகத்தின் வெளியீடாய் வந்திருக்கின்றஏலியன்களின் திக்விஜயம்எனும் நூல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்நூலாசிரியர் . வைரவராஜன் அவர்கள் 17க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தந்து, தமிழ் இலக்கிய உலகிற்கு நற்பணி செய்திருக்கிறார்.

          ஆளுமை மேம்பாடு, புவி வெப்பமயமாதல், தடைகளைத் தாண்டுவோம், மாயமான விமானம் விலகாத மர்மம் என்று தனிமனித மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் நூல்களை எழுதியதோடு குற்றாலக் குறவஞ்சி, சூர்ப்பனகையின் மூக்கு போன்ற தமிழ் இலக்கியம் குறித்த நூல்களையும் படைத்துத் தந்திருக்கிறார்.

          அயல்கிரக மனிதர்களாகிய ஏலியன்களைப் பற்றி நம்மவர்கள் எப்படி எண்ணுகிறார்கள் என்றால், அவர்களைத் தேவர்கள், கந்தர்வர்கள், கடவுளர்கள் எனக் கூறுகிறார்கள். புராணங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்க ஹாலிவுட் திரையுலகமோ அயலகத்தில் இருந்து வருகின்ற விஞ்ஞான மனிதர்களைப் பற்றித் திரைப்படமாகவே காட்டுகின்றது.

இயக்குநர் ஸ்பீல்பெர்க்கினுடையஊடழளந நுnஉழரவெநசள ழக வாந வுhசைன முiனெ  நு.வுஇ இயக்குநர் ஜார்ஜ் லுகாஸினுடையளுவயச றுயசளஇயக்குநர் நைட் ~pயாமளனுடையவுh ஏடைடயபநஹிந்தியில் அமீர்கான் நடித்து வெளிவந்த Pமு போன்ற படங்களில் அயல்கிரகங்கள் குறித்தும் ஏலியன்கள் பூமிக்கு வருவது குறித்தும் அவர்கள் உருவாக்கித் தந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள்கடவுள் வந்திருந்தார்என்ற நாடகத்தில் ஏலியன் ஒருவர் பூமிக்கு வந்து செல்வதைப் பற்றி மிகுந்த நகைச்சுவையோடு எழுதியிருப்பார். நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினர் அதனை நாடகமாகவும் நடித்திருக்கிறார்கள்.

          ‘ஏலியன்களின் திக்விஜயம்என்னும் இந்நூலில் ஆசிரியர் .வைரவராஜன் அவர்கள் ஒன்பது தலைப்புகளில் மிகப் புதிய செய்திகளை தமிழுக்குத் தந்திருக்கிறார்.

அதிலும் முதல் கட்டுரையான ஏலியன்களின் வருகை என்பதைச் சொல்லும்போது உலகெங்கிலும் ஏலியன்களைப் பார்த்தவர்களைப் பற்றிய செய்திகளையும், ரேடார் போன்ற சாதனங்களில் பறக்கும் தட்டுகள் தென்பட்ட விதத்தையும் காலவாரியாக நாட்கள், நேரம் உட்பட ஆதாரத்தோடு பதிவு செய்திருப்பது நமக்கு மிகுந்த வியப்பைத் தருகிறது.

அதிலும் பறக்கும் தட்டுகளின் வருகை, வந்த இடங்கள், நாடு, சந்தித்த மனிதர்கள், அதில் வந்த அந்த ஏலியன்களின் உருவஅமைப்பு, அவற்றின் வலிமை இவற்றையெல்லாம் சொல்லச்சொல்ல நமக்கே அந்த ஏலியன்களைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகின்றது.

          இதேபோலபாரதமும் பறக்கும் தட்டுகளும்என்ற தலைப்பில் இந்தியாவில் லடாக், கொங்கா லா பாஸ் (சீன எல்லைப்பகுதி) போன்ற இடங்களில் நடந்த செய்திகளை இவர் சுட்டிக்காட்டும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் ஏலியன்களின் அட்டகாசம் என இவர் வர்ணிப்பதும் அதிர்;ச்சியாய் இருக்கிறது.

          ஏலியன்களையும், பறக்கும் தட்டுகளையும் நம்புகின்ற, கடவுளாகக் கருதுகின்ற மனிதர்களைரெய்லிஸம்என்னும் மதத்தைச் சார்ந்தவர்களாகவே கூறுகிறார்கள் என்பதனை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தகிளாட் வொரிலென்என்பவர் பதிவு செய்த அரிய செய்தியையும் நூலாசிரியர் இந்நூலில் சுட்டிக்காட்டுவது ஆச்சரியமான ஒன்று.

          அயல்கிரகத்தைச் சேர்ந்த ஏலியன்ஸ் என்ற மனிதர்கள் வீனஸ் கிரகத்திலிருந்து வந்து ~;யர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொடுத்தாகபிரான்க்என்ற ஒரு நூலாசிரியர் குறிப்பிடும் செய்தியை ஆசிரியர் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். இது உண்மையா என்றும் தெரியவில்லை என்ற சந்தேகத்தையும் பதிவு செய்கிறார்.

          ‘ஏலியன்களும் தமிழரும்என்ற பகுதியில் நம்முடைய புராணக்கதைகளில் வருகின்ற செய்திகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். ஏலியன் ஃபோபியா என்றே ஒருவகையான நோய் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.

          மேலும் 1330 திருக்குறள்களில் சுமார் 7 குறள்களில்புத்தேள்நாடுஎன மேலுலகத்தை வள்ளுவர் சுட்டிக்காட்டியிருப்பதும் அவருக்கே வள்ளுவத் தேவநாயனார் என்ற பெயர் இருப்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

          ஒளவையாருடையஅரிது அரிது மானிடராதல் அரிதுஎன்ற பாடலின் நிறைவில்வானவர் நாடு வழிதிறந்திடுமேஎன மேலுலகத்தைப் பற்றி கூறியிருப்பதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

          பூமியில் ஏற்படும் சில அதிசயங்களான பயிர் வட்ட ஓவியங்கள் குறித்தும் ஆசிரியர் படத்தோடு விளக்கியிருப்பது இந்நூலைப் படிப்பவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கூட்டும்.

          ஸ்டிகனோகிராபி (ளுவநபயழெபசயிh) அதாவது உலகில் நடந்த பல மர்மங்களுக்கான விடைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எல்லோரிடத்திலும் உண்டு. இதனை ஸ்டிகனோகிராபி என்கிறார்கள். அவற்றுக்கான விடைகளைக் கூட அயல்கிரக மனிதர்கள் சங்கேத மொழிகளில் நமக்குப் பகிர்ந்து தருவார்களோ என்ற எண்ணம் இருக்கிறது. சில நேரங்களில் தொலைபேசிகளில் கூட சங்கேத வார்த்தைகளும், சங்கேதங்களும் கேட்பது ஏலியன்களின் குரல்களாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார் ஆசிரியர்.

          நிறைவாக என்னும் பகுதியில் இத்தகைய ஏலியன்களைப் பற்றிய மர்மங்களை அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகள் உலக நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தொடங்கப்பட வேண்டும், இவை நிரூபிக்கப்பட்டால் பல உண்மைகள் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் என ஆசிரியர் முடித்திருப்பது எல்லோருக்குமான வேண்டுகோளாகவே அமைகிறது.

          தமிழில் கவிதை, கட்டுரை, நாடகம் என இலக்கிய வடிவங்களையே படித்துக்கொண்டிருக்கின்ற வாசகப் பெருமக்களுக்குஏலியன்களின் திக்விஜயம்போன்ற அறிவியல் நூல்கள் புதிய சிந்தனையைத் தூண்டும், புதிய ஆய்வுக் களங்களை உருவாக்கும் என்பது உண்மை. இன்னும் சொல்வதானால் புராணங்கள் (மித்) வரலாறுகள் அதிகம் கொண்ட நம் நாட்டில் இத்தகைய ஆய்வுகளின் மூலமாக விடைகள் கிடைக்குமானால் அது அறிவியலுக்குக் கிடைக்கின்ற வெற்றிதான்.

          ஒரு புதுக்கவிஞன் சொல்வது போல

 ‘அத்தனையும் முடிப்போம்

 அந்தக் கர்த்தரையும் பிடிப்போம்எனும் வரிகள் காலப் போக்கில் உண்மையாகலாம்.

திரு வைரவராஜனின் பன்முக எழுத்தாற்றலுக்கு இந்நூலும் ஒரு பதச்சோறு. தொடரட்டும் இவரது பணிகள்.

அன்புடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.