நார்வே தந்த ஞானத்தமிழ் வாணர்..விருது…

வணக்கங்க! நீங்க வெளிநாட்டுல இருக்குறமாதிரி கேள்விப்பட்டேன். எந்த நாட்டுல இருக்கீங்க?’

          ‘நார்வே தமிழ்ச்சங்கத்துக்கு என் குழுவோடு பட்டிமன்றம் பேசவந்திருக்கேங்க’.

          ‘அடேயப்பா! இத்தன நாளா ஃபோர்வேயில போய் பேசிக்கிட்டு இருந்தீங்க. இப்ப நார்வேயில போயி பேசுறீங்கஎன்று அவர் சொன்னவுடன் இரண்டு பேரும் வாய்விட்டுச் சிரித்தோம். இந்த உரையாடல் எனக்கும் என் இனிய நண்பர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கும் இடையே நடந்த அலைபேசி உரையாடல்தான்.

          நார்வே நாட்டிற்கு இன்னொரு பெயர் நள்ளிரவுச் சூரியன் நாடு. அந்நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் சூரியன் சிறிது நேரம் மட்டும் மறைந்து முழுப்பகலாகக் காட்சிதருமாம்.

அப்படிப்பட்ட அபூர்வநாட்டில் மக்கள் தொகை குறைவுதான். ஆனால் இயற்கை அழகும், செல்வவளமும் நிறைந்த நாடு. பூலோக சொர்க்கம் என்று அத்தனை நாட்டினரும் இந்நாட்டைப் புகழக்காரணம் என்ன தெரியுமா?

இந்நாட்டில்தான் எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் இருக்கிறது. ஓடும் ஆற்றில், வீழும் நீர்வீழ்ச்சியில், அலையடிக்கும் ஏரிகளில், வீட்டுக் குழாய்களிலும் எனக் கிடைக்கின்ற தண்ணீரை அப்படியே அள்ளிக் குடிக்கலாம். அவ்வளவு தூயநீர். பொறாமையாகத்தான் இருக்க்pறது என்ன செய்ய? நம் நாட்டிலும் அப்படி ஒரு பொற்காலம் இருந்ததை நானே சிறுபையனாக இருந்தபோது அனுபவித்திருக்கிறேன்.

          சரி விடயத்திற்கு (இலங்கைத் தமிழ்) வருவோம். உலகில் சூரியன் முதன்முதலாக உதிக்கின்ற நியூசிலாந்து தொடங்கி இங்கிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, ~;யா, ஜப்பான், அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ச்சங்கங்களிலும் அங்கு நடத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளிகளிலும் போய்ப் பேசுகிற வாய்ப்பு எனக்கு மில்லினியம் ஆண்டு (2000) முதல் கிடைத்து வருகிறது.

இதில் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி என்ன தெரியுமா?; நார்வே நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழை மொழிப்பாடமாக படித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை தரப்படுகிறது என்பதுதான்.

இனிவரும் தலைமுறைகளில் நம் பிள்ளைகள் தமிழில் படிக்கவேண்டுமென்றால் அயல்நாட்டுக்குத்தான் செல்லவேண்டுமோ? என்ற எண்ணம் கூட எனக்கு ஏற்படுவதுண்டு.

நார்வே நாடு எங்களை எதற்காக அழைத்தது தெரியுமா? அங்கு நாற்பது ஆண்டுகளாக மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்ற நார்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா நிகழ்வுக்காகத்தான்.

அத்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத் தமிழர்கள். அவர்கள்தான் எங்களை அழைத்திருந்தார்கள்.

நாங்கள் நார்வேயில் சென்று இறங்கிய    போது மைனஸ் நான்கு டிகிரி கடும்குளிர். அந்தக் குளிரிலும் திரு. ஸ்ரீ. நவரத்தினம் அவர்களும்  அவருடைய மகளான மருத்துவர் லக்~pகா, மற்றும் குடும்பத்தாரும் எங்களை அந்த நள்ளிரவில்; கொட்டும் பனியில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச் சென்று தங்கள் இல்லத்தில் தங்கவைத்து எங்களுக்குச் செய்த உபசரிப்பினை எங்களால் என்றும் மறக்க இயலாது. செல்வி. லக்~pகா அவர்கள் மருத்துவர் மட்டுமல்ல. அந்நாட்டு மொழியான நார்வேஜியன் மொழியில் புலமைமிக்கவர்.

 அரசு மொழிபெயர்ப்பாளர், மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞர். இத்தனை தகுதிகளோடும் எங்களுக்காகக் காரோட்டிக்கொண்டே அவ்வூரைச் சுற்றிக்காட்டிய பெருமையும் அவர்களையே சாரும்.

அதுமட்டுமில்லை இப்பெருமைமிகு நார்வே தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சஞ்ஜயன்பொருளாளர் வேலழகன், சங்க உறுப்பினர்கள் மற்றும் உமைபாலன், நாடகத்தமிழ் அறிஞர் மௌனகுரு என அத்தனை பேரினுடைய இனிய அன்பும், ஆங்கிலம் கலக்காத தமிழும் நார்வே நாட்டுக் குளிரும் எங்களை உறைய வைத்தன

அதிலும் அவர்கள் பேசும்போது ஒவ்வொரு முறையும்ஆம்என்பதைஓம் ஓம்என்று சொல்லும் போது எங்களுக்கு பக்தியால் மெய்சிலிர்த்தது.

அடுத்தத் தலைமுறைக்கு நாம் வழங்க இருப்பது அறிவியல் வழியா? அன்பு நெறியா? எனும் பட்டிமன்றத்தை நாங்கள் தொடங்குவதற்கு முன்பாக அந்நாட்டுக்குழந்தைகளின் நடனநிகழ்ச்சியும், தமிழிசை நிகழ்ச்சியும், நாடகமும் எங்களை அதிரவைத்தன. பட்டிமன்றத்தில்அன்புநெறிதான்என்று நான் தீர்ப்புச் சொன்னபோது அரங்கம் அதிரக்கிடைத்த வரவேற்பு ஓர் உண்மையை எங்களுக்கு உணர்த்திற்று.

தங்கள் தாய்நாட்டைப் பிரிந்து புலம்பெயர்ந்து வந்த அவர்கள்; தமிழ்மீது கொண்டிருக்கின்ற பற்றும்;, தங்கள் தாய்நாட்டின் மீதும், இரத்தஉறவுகள் மீதும் கொண்டிருக்கின்ற அன்பும் எத்தகையது என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.

மறுநாள் மாணிக்கவிழாவின் சங்கமம் எனும் மாநாட்டு மலர் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மேடையில்தான் எனக்குஞானத்தமிழ் வாணர்எனும் விருதினை நார்வே தமிழ்ச்சங்கம் வழங்கிச் சிறப்பித்தது. பின்னர் எனது தனிஉரையும், திரைஇசை நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

நார்வே நாட்டின் அதிசயங்களில் ஒன்று விஜிலேண்ட் ஸ்கல்ப்ச்சர் பார்க் (ஏபைநடயனெ ளஉரடிவரசந pயசம) இது திறந்தவெளி சிற்பக்கூடம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அங்கிருந்த நூற்றுக்கணக்கானச் சிற்பங்களை கஸ்ட்டவ் விஜிலேண்ட் (புரளவயஎ எபைநடயனெ) என்ற ஒரே சிற்பி 1942இல் செய்திருக்கிறார் என்பதுதான்.

 அதிலும் அச்சிற்பங்கள் ஆடை, ஆபரணங்கள் ஏதுமின்றி செதுக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் கலைநுட்பம் காண்போரை வியக்கவைக்கிறது. அச்சிற்பங்களில் ஒன்று அழுது அடம்பிடிக்கும் ஒரு மூன்று வயதுச் சிறுவனின் அற்புதச் சிற்பம.; இச்சிற்பம் பலமுறை திருடுபோய் திரும்ப வந்திருக்கிறதாம்

உலகப்புகழ்பெற்ற நோபல்பரிசு இந்நாட்டின் தலைநகராகிய ஓஸ்லோவில்தான் (ழுளடழ) தரப்படுகிறது என்பதை அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தோம். நோபல்பரிசு வாங்காவிட்டாலும் தருகின்ற இடத்தையும் பரிசுபெற்ற மனிதர்களின் படத்தையும் பார்த்தோம், மகிழ்ந்தோம், வணங்கினோம். நம்நாட்டின் அடுத்தத் தலைமுறை இங்கு வந்து பரிசு வாங்க வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி ஜெயதுர்க்கா கோவிலுக்கும், அந்நாட்டின் சிறிய குன்றில் அமைந்திருக்கும் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் சென்று வணங்கினோம்.

அடுத்த ஆண்டே நம் தமிழர் யாராவது நோபல் பரிசு வாங்கினால் என்னோடு வருகைதந்த பட்டிமன்றக்குழுவினரான லெட்சுமணப்பெருமாள், செல்லக்கண்ணன், மலர்விழி, வேம்புபாலா என அனைவருக்கும் மொட்டை போடுவதாக மனதார வேண்டிக்கொண்டேன்.

கடலுக்கடியில் செல்லும் சப்வேக்கள், தரையின் மேல் செல்லும் டிராம் வண்டிகள், ஆகாயத்தில் பறந்து செல்லும் விமானங்கள் எலக்ட்ரானிக் சைக்கிள்கள், பேட்டரிகார்கள் என அடுத்த யுகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது அந்நாடு.

எங்கு நோக்கினாலும் சுத்தம், அமைதி, அழகு, அன்பு ததும்பும் மனிதர்கள், கண்களிலேயே தென்படாத போலீஸ்காரர்கள், கற்கோட்டைகள், பீரங்கிகள் என வியக்கவைக்கும் காட்சிகள்.

ஒரு காலத்தில் அந்நாட்டினர் கடற்கொள்ளையர்களாக இருந்ததற்கானச் சான்றுகள் இன்றைக்கும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது உலகையே சமாதானப் பேச்சுக்கு அழைக்கும் இடமாக மாற்றியிருக்கும் பெருமை அந்நாட்டு மக்களையும், அவர்களை ஆளும் அந்நாட்டின் பெண் பிரதமரான எர்னா சால்பெர்க் (நுசயெ ளுழடடிநசப) அவர்களையே சாரும் என்ற பல்வகையான எண்ணங்களோடு நாங்கள் விடைபெறத் தயாரானோம்.

நம் ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் நம் மதுரையைச் சார்ந்த திரு.சுந்தர், தனலெட்சுமி தம்பதியினர் தங்கள் நண்பர்களோடு எங்களுக்குத் தந்தமதுரை ஸ்டைல் விருந்துமறக்க முடியாதது.

நார்வே நாட்டின் நம் மக்களின் அன்பும், உபசரிப்பும், தமிழ் வளர்க்கும் பாங்கும் எங்களை அங்கேயே தங்கிவிடலாமா? என எண்ணச் செய்தது. பிறகு தமிழ்நாட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்ற கவலையும் வந்ததால் விமானத்தில் புறப்பட்டோம். விமானம் நம் தாய்மண்ணை நோக்கி விரைந்தது.

நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியதுஎனும் தமிழ்ப்பாடலின் ரிங்டோன் விமானம் புறப்படும் முன் கேட்க, நாங்கள் கைதட்டி மகிழ்ந்தோம். நம்ம ஊரு…. நம்ம ஊருதான்

                                  இப்படிக்கு      

                                                              கு.ஞானசம்பந்தன்

                                                                      தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.