கல்வி… கரையிலே….

கல்வி கரையில கற்பவர் நாள்சில

                   மெல்ல  நினைக்கின் பிணிபலதௌ;ளிதின்

                   ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

                   பாலுண் குருகின் தெரிந்து.                                                                                                                                  –நாலடியார்.

          கல்வி கரையில. அதாவது கல்வியைக் கற்பதற்கு எல்லை ஏதுமில்லை என்றுதானே படித்திருக்கிறோம். ஆனால்கல்வி கரையிலேஎன்று போடலாமா? என்று கற்ற சான்றோர்கள் ஐயப்படலாம்.

          எனது பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி (இளங்கலை, முதுகலை) எல்லாமே வைகைக்கரையில் அமைந்திருந்ததாலோ என்னவோ நான் என் கல்வி வளர்ச்சியை ஆற்றங்கரையிலேயே பெற்றேன் என்று பெருமிதமாகச் சொல்லிக்கொள்வேன்.

          சோழவந்தானில் பிறந்த நான் அதன் தென்கரையிலிருந்த முள்ளிப்பள்ளம் என்னும் சிற்றூரில் உள்ள அரசுபள்ளியில்தான் பள்ளிக்கல்வியை முடித்தேன். என் தந்தையாரே எனக்கு ஆசிரியராய் வாய்த்தது நான் பெற்ற பேறுகளில் ஒன்று. பள்ளிக்கல்வி (அந்தக்கால  ளு.ளு.டு..) முடித்தவுடன் தீந்தமிழ்த்; தியாகராசர் கல்லூரியை நோக்கித்தான் என் பயணம் தொடங்கிற்று. அந்தக்கால புகுமுகவகுப்பு ( P.ரு..)மாணவன் நான்.

          1977இல் இளங்கலைச் சிறப்புத்தமிழ் படிப்பதற்காக அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர்.சுப.அண்ணாமலை அவர்களிடத்தில் என் தந்தையார் என்னை ஒப்படைத்தார்;.

என்னைப் பெற்ற தந்தை புலவர்.கு.குருநாதன் என்றால், எனக்குக் கற்றுத்தந்து என்னை ஆளாக்கிய தந்தை கலைத்தந்தைதான்; அவர் உருவாக்கிய கல்வி ஆலயமாகிய தியாகராசர் கலைக்கல்லூரிதான்.

          1980ஆம் ஆண்டில் நான் இளங்கலைச் சிறப்புத்தமிழ் வகுப்பில் சேர்ந்தேன். அவ்வகுப்பில் பதினாறு பேர் படித்தோம். அப்போதெல்லாம் முதுகலையில் மட்டும்தான் மாணவியர் சேர்ந்து படிப்பர். இளங்கலை, இளம்அறிவியல் என எல்லாவற்றிலும்; மாணவர்கள் மட்டும்தான்.

கிராமத்து மாணவர்களாகிய நாங்கள் அத்தனைபேரும் முதல்நாள் வகுப்பில் பயத்தோடு உட்கார்ந்திருந்தோம். நாலுமுழ வேட்டி, அரைக்கைச் சட்டை, தூக்குச்சட்டியில் சாப்பாடு. இவைதான் எங்கள் அடையாளம். முதல்வகுப்பு ஆசிரியர் எங்களுக்குப் பாடம் நடத்தியபின் ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் சொல்லிவிட்டுப் போனார். இரண்டாவது மணியில் சிங்கம்போன்று ஒருவர் வகுப்புக்குள் நுழைந்தார்.

உள்ளே வந்த அவர் ஒவ்வொருவரையும் மிரட்டிய மிரட்டலும், அரட்டிய அரட்டலும் எங்களுக்கு உயிர் போய் போய் வந்து கொண்டிருந்தது. ‘ஏதாவது தப்புப் பண்ணினீங்கஅத்தனைபேர் டி.சி.யையும் இப்பவே வாங்கி கொடுத்திருவேன்என்று அவர் கர்ஜிக்க, என்னோடு இருந்த ஒரு மாணவர் அழுதேவிட்டார். ஏனென்றால் அவர் அப்போதுதான் அலுவலகத்தில் டி.சி.குடுத்து சேர்ந்திருந்தார். அப்படி மிரட்டியவர்தாம் எங்களின் வழிகாட்டிகளில் ஒருவராகிய ஐயா.கதி.சுந்தரனார் அவர்கள். அவரின் அன்புதான் எங்களுக்கு நீரூற்றாக அமைந்ததை நாங்கள் பின்னர் உணர்ந்து கொண்டோம். அந்த அரட்டல், மிரட்டல், உருட்டல் எல்லாம் அன்பின் அடிப்படையில்தான் என்பது எங்களுக்குப் பின்னர் புரிய ஆரம்பித்தது.

          அன்றே பிற்பகல் வகுப்பிற்குச் சைவசித்தாந்தச்சிங்கம் ஒன்று நுழைந்தது. ஆம். ஆங்கிலம், தமிழ் என இருமொழிப் புலமையும், இசையோடு பாடும் திறமையும் கொண்ட சித்தாந்தச் செம்மல் சங்கரநாராயணனார் உள்ளே வந்தார்.

அவர் தோளில் அங்கவஸ்திரம், நெற்றியில் சந்தனப்பொட்டு, ஆஜானுபாகுவான தோற்றம், கணீரென்ற குரலில் அவர் பாடிய பாட்டு என்று எல்லாம் எங்களை மயக்கியன. இறையனார்அகப்பொருள்உரை எனும் நூலினை அவர் பாடி நடத்தியபோது சொக்கிப்போனோம். ஒருமணிநேர வகுப்பு முடிந்தபிறகு அவர் கேட்டாரே ஒரு கேள்வி எங்களைப் பார்த்து,

நீங்கள் எல்லோரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்தாமே?’ என்று கேட்க, நான் பயத்தோடு எழுந்து, ‘இல்லை ஐயா! நாங்கள் முதல்ஆண்டு மாணவர்கள்என்று சொல்ல, அவர் சற்றும் தயங்காமல், ‘சரி, இந்தப்பாடம் உங்களுக்கு மூன்றாம் ஆண்டுக்குப் பயன்படும்என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். முதல்நாள் அனுபவமே எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்.

          என்.சி.சி., நேவி, என்.எஸ்.எஸ். விளையாட்டு, என்று ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் மாணவர்கள் கட்டாயம் சேரவேண்டும் என்பது விதி. நாங்கள் படிக்கிற காலத்தில்தான் செமஸ்டர் முறையும் வந்தது. நானும் என்.சி.சி.யில் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று ஒத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள் நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.

          நான் சோழவந்தானிலிருந்து தொடர்வண்டியில் (இரயில்pல்) பயணம் செய்து பிறகு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்து சேரவேண்டும். காலை பத்து மணிக்கு வகுப்பென்றால் இதில் பிரச்சனையில்லை. ஆனால் ஆறுமணிக்கு மைதானத்தில், என்.சி.சி.சீருடையோடும் கனத்த பூட்சுகளோடும் நிற்க வேண்டும்.

இதில் ஒரு நிமிடம் தாமதமானாலும் கல்லூரிக்கு எதிரே இருக்கிற தெப்பக்குளத்தை மூன்றுமுறை சுற்றி ஓடி வர வேண்டும். எனக்குச் சோதனை என்னவென்றால் என்.சி.சி. இருக்கிறநாளில், நான் வசித்த சோழவந்தானிலிருந்து அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு இரண்டுக்குமான பார்சல்களை எடுத்துக்கொண்டு யூனிபார்மோடு இரயில்வே ஸ்டேசன் நோக்கி விரைந்து ஓடிவருவேன். நாலுமணிக்கு கோவையிலிருந்து வரும் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்.

அப்போது தெருநாய்களுக்கும் எனக்குமிடையே நடக்கிற ஓட்டப்பந்தயத்தில் நான் பலமுறை ஜெயித்ததால்தான் இரயிலைப் பிடித்திருக்கிறேன். இதில் சிலசமயம் எதிர்ப்புறத்தில் என்னை நாய் விரட்டிவந்தால் இரயில் போய்விடும். பிறகு தெப்பக்குளத்தைச் சுற்றி ஓடுவேன்.

          படிக்கிற காலத்திலேயே கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என்று பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம்தான் இப்போதும் எனக்குக் கை கொடுக்கிறது.

இளங்கலை பி.., படிக்கிறபோது மறக்க முடியாத ஒரு சம்பவம். அப்போது கல்லூரி தன்னாட்சி (யுரவழழெஅழரள) பெறவில்லை. எங்களுக்குப் பல்கலைக்கழகம்தான் தேர்வு நடத்தும். ஆறுமாதத்திற்கு ஒருமுறை தேர்வு வரும். இதில் இரண்டாம்ஆண்டு மூன்றாவது செமஸ்டரில் ஆங்கிலத்தேர்வு எழுதிவிட்டு வந்தோம்.

தேர்வு முடிவுகளைப் பார்க்க மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவர் ஒருவர் மின்னல்போல் விரைந்து வந்து, ‘நம் வகுப்பில் 15பேர் பாஸ். ஒருவர்தாம் பெயில்என்று அறிவிக்க, வெற்றி பெற்ற நாங்கள் ஆனந்தக் கூத்தாட, தோல்வியடைந்த மாணவர் குழம்பி நிற்க, நாங்கள் அந்த மாணவருக்கு அறிவுரையெல்லாம் சொல்லி, ‘தற்கொலை எதுவும் செய்துகொள்ள வேண்டாம்என்றும் அவரைத் தேற்றிவிட்டு, அந்த வெற்றியைக் கொண்டாட எல்லோரிடமும் இருந்த காசை வைத்துக்கொண்டு ஒரு சிறந்த மலையாளப்படம் பார்க்கச் சென்றோம். (நாங்கள் எல்லா மொழிப் படங்களும் பார்ப்போம்).

மறுநாள் பொழுது விடிந்தது. எங்கள் தலையில் இடி விழுந்தது. உண்மையான தேர்வு முடிவு என்னவென்றால் அந்த ஒரு மாணவர்தான் ஆங்கிலத்தில் தேறியிருந்திருக்கிறார். நாங்கள் பதினைந்து பேரும் பெயில். ரிசல்ட் பார்த்த மாணவர் ஊரைவிட்டே ஓடிவிட்டார். வெற்றி பெற்ற மாணவர் எங்களுக்கு ஆறுதல் சொல்லி நாங்களும் எந்த முடிவும் எடுக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டார். பிறகு அடுத்த செமஸ்டரில் எல்லோரும் பாஸ் செய்தோம். இதில் ஒரு ஆச்சரியம் 1977-1980ஆண்டுகளுக்கான எங்கள் வகுப்பு மாணவர்கள்தாம் நூறு சதவீதம் முழுமையாக முதல்வகுப்பில் தேறியிருந்தோம்.

          இதற்கிடையில் மாணவர்கள் பெற்றோர்களைக் கல்லூரிக்கு அழைத்து வரவேண்டும் என்று ஒருநாள் ஆணை ஒன்று வந்தது. மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நான், என் தந்தையாரை அழைத்துக்கொண்டு முதல்வர் அறைக்குச் சென்றேன். என் தந்தையாரும் முதல்வர் அண்ணாமலை ஐயா அவர்களும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். என் தந்தையார் பெருமையாகஇவன்தான் என் மகன்என்று முதல்வருக்குச் சொல்ல, அவர் மிகுந்த அன்போடுஅப்படியா தம்பி! எந்த காலேஜ்ல படிக்கிறாய்?’ என்று ஆர்வமாய்க் கேட்டார்.

என் தந்தைக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. வீடுவரை இலட்சார்ச்சனை தொடர்ந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்  டாக்டர்.நா.பாலுசாமி, டாக்டர்..ஆனந்தராஜ், டாக்டர்.மு.அருணகிரி போன்ற பெருமக்கள் முதுகலை வகுப்பிற்குத்தான் பாடம் எடுப்பார்கள். அதனால் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. இதற்கு நான் வழி ஒன்று யோசித்து மூன்றாம் ஆண்டு நிறைவுநாளில் ஒரு வேலை செய்தேன்.

அப்போதெல்லாம் விடை பெறுகின்ற கடைசிநாளைத் துறைஆசிரியர்களோடு சேர்ந்து கொண்டாடுவோம். புகைப்படம் எடுத்துக்கொள்வோம். அந்த நிகழ்ச்சிக்கு எங்களுக்கு வகுப்பெடுக்கும் பேராசிரியர்களோடு முதல்வர் உட்பட பெரும் பேராசிரியர்களும் கலந்து கொள்வார்கள்.

அன்றைக்கு நான், நாங்கள் சந்திக்காத பெரும் பேராசிரியர்களுக்கு எங்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன். அதாவது பதினாறு மாணவர்களைப் பற்றி நான் ஒரு சிறு குறிப்புச்சொல்லி அப்போது ஓடிக்கொண்டிருந்த படத்தின் பெயரையும் சொல்லி அவரை அழைக்க, அவர் மேடைக்கு வந்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வார்.

அதில் ஒரு மாணவர் வகுப்பில்எப்போது இருப்பார், எப்போது இருக்கமாட்டார் என்பது எங்களுக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. ஆசிரியர்களுக்குத் தெரியவே தெரியாது’  என்று அவரைப்பற்றிச் சொல்லிவிட்டுமாயமன்னன்என்று ஒரு திரைப்படப் பெயரையும் சொன்னவுடன், அவர் ஸ்டைலாக மேடைக்கு வந்து வணங்கிவிட்டு, கூட்டம் முடிவதற்குள் காணாமல் போனார்.

இவ்வாறு என்னையும் சேர்த்துக்கொண்டு அத்தனை மாணவர்களையும்; நான் அறிமுகம் செய்து திரைப்படத்தின் பெயரையும் சொல்ல மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். முதல்வர் அவர்கள்இப்படிப்பட்ட மாணவர்களைச் சந்திக்காமல் போனேனேஎன்று மகிழ்வோடும், நெகிழ்வோடும் சொன்னார்.

          1980-1982ஆம் ஆண்டுகளில் நான் முதுகலையில் தியாகராசர் கல்லூரியிலேயே சேர்ந்தபோது மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா வந்தது. அதைக் கல்லூரியில் கொண்டாடும் போது பாரதியின்பாஞ்சாலி சபதம்என்னும் கவிதையை நானே நாடகவடிவமாக்கி, நானே வசனம் எழுதி மிகச்சிறந்த ஒப்பனைகளோடு மேடையேற்றி அதில் சகுனி வேடமும் ஏற்று, அத்தனைபேரையும் மிரட்டினேன்.

என்னோடு துரியோதனனாக நடித்த மாணவர் வசனம் மறந்துபோகிற போதெல்லாம், ‘நான் என்ன செய்யட்டும் மாமா, என்ன செய்யட்டும்?’ என்று என்னிடம் கேட்பார்.

அதேபோல அர்ச்சுனன் வேடம் போட்டவருக்குகாண்டீபம்என்ற வில் கிடைக்கவில்லை. அவர் அதைவிட்டுவிட்டுக் கவட்டைவில்லைத் தோளிலே மாட்டிக்கொண்டு வந்து விட்டார். எப்படியோ நாடகம் வெற்றிகரமாக நடந்தது. அப்போது நான் கவின்கலைக்கழகத்தின் செயலராய் இருந்ததால் பல அறிஞர்களை அழைத்து வந்து பேசவைக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எம்.., தேர்வில் பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றவர்களில் நானும் ஒருவன்.

          பின்னர் 1982-83களில் இளம் ஆய்வாளர் (எம்.பில்.,) முடித்தேன். பின்னர்  ஆய்வுப்படிப்பினையும் (பி.ஹெச்.டி); மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன். 1985இல் யு.ஜி.சி.தேர்வில் வெற்றிபெற்ற தமிழ் மாணவன் அந்த ஆண்டில் நான் ஒருவன்தான். அதே ஆண்டில் நான் பயின்ற தாய்மடியாகிய தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறையில் எனக்கு வேலை கிடைத்தது.

எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களோடு நானும் ஆசிரியப்பணியை ஏற்றேன். 1991இல் பி.ஹெச்.டி பட்டம் முடித்தேன். 2014இல் ஓய்வுபெறும் வரை எனது நெறியாள்கையில் எம்.பில்.,பட்டம் பெற்றவர்கள் 65 பேர். முனைவர்ப் பட்டம் பெற்றவர்கள் 16பேர். இக்காலங்களில்தான் என்னால் மேடைகளில் பேசமுடிந்தது. நூல்கள் எழுத முடிந்தது. நான் எழுதி; நூல்களில் ஒன்றாகியபேசும் கலைஎனும் நூல் எங்கள் கல்லூரியிலேயே மாணவர்களுக்கான பாடநூலாய் அமைந்ததும் எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு.

பின்னர் நான் வானொலிகளில் பேசவந்தேன். 2000ஆவது ஆண்டில்  தொலைக்காட்சிக்குச் சென்றேன். 2003ஆம் ஆண்டில் விருமாண்டி திரைப்படத்தில் எங்கள் கல்லூரித்தலைவரின் அனுமதியோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இன்றுவரை (பிகில் படத்தில் நயன்தாராவுக்குத் தந்தை) 35 படங்களில் நடித்திருக்கிறேன். உலக நாடுகளெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன்.

          2006ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியில் பணியாற்றும்போதேகலைமாமணிவிருதினை அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் பெற்றதோடு, 2014ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருதையும் அவர்களிடமே பெற்றேன். குன்றக்குடி ஆதீனம்தமிழாகரர்விருதையும், திருவாவடுதுறை ஆதீனம்நற்றமிழ் நாவலர்எனும் விருதினையும் எனக்கு வழங்கிப் பெருமை சேர்த்தன. அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள்உவகைப்புலவர்என்ற பட்டத்தையும், குவைத் தமிழ்ச்சங்கம்பண்டிதமணிஎன்ற பட்டத்தையும் பெருமையோடு எனக்கு வழங்கின.

          தற்போது திரைத்துறையில் சிம்புதேவன், சுசி.கணேசன், கரு.பழனியப்பன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் எங்கள் கல்லூரியில் எங்களிடத்தில் படித்தவர்கள் என்பது எங்களுக்குப் பெருமையான ஒன்று. அவர்கள் படித்த காலத்தில் நான் கல்லூரியின் கவின்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராயும், தியாகராசர்செய்திமடலின் ஆசிரியராகவும் இருந்ததால் இவர்களின் திறமைகளையெல்லாம் என்னால் அறிய முடிந்தது.

          2014ஆம் ஆண்டு நான் ஓய்வுபெற்ற பிறகும்கூட பெருமைமிகுந்த எங்களது கல்லூரித்தலைவர் ஐயா.திரு.கருமுத்து.கண்ணன் அவர்களும், செயலர் திரு. ஹரி தியாகராஜன் அவர்களும் எனக்குத் தகைசால் பேராசிரியர் என்னும் பதவியைத் தந்து பெருமை சேர்த்தார்கள்.

          எங்கள் கல்லூரி வளாகத்தில் 2013ஆம் ஆண்டு அமெரிக்கத் தொழிலதிபர் திரு.பால்சி.பாண்டியன் அவர்களோடு ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (.ழு.ரு.) ஏற்படுத்தித் தமிழிசை ஆய்வு மையத்தையும் உருவாக்கி மாணவர்கள் இலவசமாக இசைபயில வழி வகுத்தோம். இத்தமிழிசை ஆய்வுமையத்தை இசைஞானி இளையராஜா அவர்கள் வந்து தொடங்கி வைத்தார்.

சமீபத்தில் 04.11.2019ஆம் ஆண்டுதமிழிசைப் பேரகராதி (பண்களஞ்சியம்)’ எனும் நூறு பண்கள் கொண்ட ஆய்வு நூலையும், குறுந்தகட்டையும் வெளியிடும் வாய்ப்பு எங்கள் கல்லூரிப் பெருந்தகையோரால் எனக்குக் கிடைத்தது. இவ்விழாவில் எங்கள் கல்லூரித் தலைவர் தலைமையேற்க, செயலர் முன்னிலை வகிக்க, மூன்று அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு. .பா.பாண்டியராஜன், மாண்புமிகு.செல்லூர்.ராஜு, மாண்புமிகு.ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு புரவலர் பால்சி.பாண்டியன் அவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

          நான் எவ்வளவு பெருமை பெற்றாலும், எத்தனை பட்டங்கள் பெற்றாலும் அவையெல்லாமே என்னை உருவாக்கிய எங்கள் கல்லூரியையே சாரும். கலை அன்னையார் டாக்டர்.திருமதி. இராதா தியாகராஜன் அவர்கள் காலத்தில் பணியாற்றத் தொடங்கிய நான் இன்றளவும் இந்தக் கல்லூரியின் புகழோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் ஒருபுறம் வைகை ஆற்றின் கரை. மறுபுறம் தெப்பக்குளக்கரை என இரண்டுக்கும் நடுவே இந்தக் கல்லூரிக்கடல் அமைந்திருப்பதுதான்.

          ஆம்! கல்வி கரையில தான். என்னைப் பொறுத்தமட்டில் வைகைக் கரையிலே தான். மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகிய எங்கள் தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரி என்னும் கலைக்கோயில் அறிஞர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், பொருளாதாரமேதைகள், அமைச்சர்கள், விளையாட்டுவீரர்கள் என எத்தனையோ சான்றோர்களை உருவாக்கியிருக்கிறது. இன்னும் எத்தனையோ பேர்; வந்துசேர இருக்கின்ற கல்விக்குர்p வேடந்தாங்கலாகவும் சிறந்து விளங்குகிறது.

பறவைகள் எங்குச் சென்றாலும் தங்கள் கூட்டை நினைப்பதைப்போல, நாங்களும் எங்கள் கல்லூரியை நினைத்து வாழ்கிறோம். வளர்கிறோம்.

என்றும் உள தமிழ்போல உயரட்டும் எங்கள் கல்லூரி

           அன்புடன்

                                                                       கு.ஞானசம்பந்தன்.

                                                                     தகைசால் பேராசிரியர்

                                                           தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.