பல்கலைக்கழகமாய் பாங்குடன் வளர்க!

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம்; கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’
என்பது மகாகவி பாரதியின் வாக்கு.
‘ஒருவருக்கு ஒருவேளை உணவுக்காக மீன் கொடுப்பதைக் காட்டிலும் மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சாலச்சிறந்தது’ என்பது சீனப்பழமொழி.
1993ஆம் ஆண்டு புனித மைக்கேல் கல்வி அறக்கட்டளை (ளுவ.ஆiஉhயநட நுனரஉயவழையெட யனெ ஊhயசவையடிடந வுசரளவ) எனும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி மிகச்சிறந்த முறையில் செயல்படுத்தி வருகின்ற, இவ்வறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டு இது.
பதினைந்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை இவ்வறக்கட்டளை பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வருகிறது. கிராமப்புற மாணவ, மாணவியருக்கு எளிய கல்விக்கட்டணமும், அதே நேரத்தில் அரிய தொழிற்கல்வியையும் வழங்குவதோடு,
‘இல்லாதவரையும், கல்லாதவரையும் கற்றுணர்ந்த சான்றோராக்குதல்’ எனும் உயரிய குறிக்கோளோடு இவ்வறக்கட்டளை செயல்பட்டு வருவது கல்வி உலகிற்குக் கிடைத்த ஒரு வரம்.
இக்கல்வி நிறுவனத்தை நிறுவிய பெருமகனார் கல்விரத்னா அமரர். டாக்டர். வி.மைக்கேல், அவர்களால் தொடங்கப்பெற்ற இக்கல்வி அறக்கட்டளைப் பணியினை அன்னாரது துணைவியார் அரிமா. யு.பாத்திமா மேரி அவர்களும், இத்தம்பதியினரின் தவப்புதல்வருமாகிய அரிமா. டாக்டர். எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் அவர்கள் நிறுவனத் தலைவராய் வழிநடத்தி வருகின்றார்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எந்;நோற்றான் கொல்லெனும் சொல்.
எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப இந்நிறுவனத்தை உயர்ந்தோங்கச் செய்வதில் முன்னிற்கிறார் அரிமா. டாக்டர். எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் அவர்கள். பொறியியல் அறிஞராய் பட்டம் பெற்ற இப்பெருமகனார் தம் தந்தைக்கு நற்பெயரை பெற்றுத்தருவதோடு உலகப் பல்கலைக்கழகங்களின் உயரிய பட்;டங்களையும் பெற்று இக்கல்வி நிறுவனத்தை விருதுகளால் அலங்கரித்து வருகிறார்.
தகுதி மிக்க தாளாளர், செயல் திறன் மிக்க செயலர், ஓயாது உழைக்கும் முதல்வர், அறிவாற்றல் மிக்க ஆசிரியப்பெருமக்கள் எனும் இவ்வற்புதக் கூட்டணியால் இயங்கிவரும் இப்புனித மைக்கேல் கல்வி அறக்கட்டளை (St.Michael Educational and Charitable Trust) பொன்விழா, வைரவிழா, நூற்றாண்டுவிழா என விழாக்களால் பொலிவு பெறட்டும்.
இக்கல்வி ஆலயம் பல்கலைக்கழகமாய் பாங்குடன் வளர நற்றமிழால் வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்.