இடங்கழி நாயனார்

“மடல் சூழ்ந் தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன்”
-திருத்தொண்டர் தொகை – சுந்தரமூர்த்தி நாயனார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இடங்கழி நாயனார்
பற்றிக்காண்போம். இவர் சோழர்குடியில் பிறந்தவர். இவர்
தில்லையம்பலத்திற்குப் பொன்வேந்த சோழனாகிய ஆதித்த சோழனின்
முன்னோர். கோநாட்டின் தலைநகராகிய கொடும்பா௵ரில் தங்கியிருந்து
வேளிர்குலத்து அரசராக ஆட்சி புரிந்தார் வந்தார்.
தம் ஆட்சியில் சைவநெறி தழைக்கும் பொருட்டுத் திருக்கோயில்களில்
எல்லாம் வழிபாட்டு முறையினை சீர்செய்ததோடு சிவனடியார்களுக்கு
நாள்தோறும் திருவமுது (உணவு) அளிக்கும் நெறியினையும் மேற்கொண்டு
வந்தார். இந்நிலையில் இவரைப்போன்றே இவர் நாட்டில் வாழ்ந்த சிவனடியார்
ஒருவர் உணவு ஏதும் கிடைக்காத நிலையில் அரசர்க்குரிய நெற்பண்டாரத்தில்
(நெற்களஞ்சியத்தில்) நள்ளிரவில் புகுந்து நெல்லைக் களவு செய்தார்.
அந்நிலையில் அவரைக் கையும் களவுமாகப் பிடித்த அரண்மனைக்
காவலர்கள் அரசராகிய இடங்கழி முன் நிறுத்தினர். இடங்கழியாரும் ‘நீர் ஏன்
நம்முடைய நெற்பண்டாரத்தில் களவு செய்தீர்’ எனக் கேட்க, ‘நான் எனக்காகச்
செய்யவில்லை, சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கவே இவ்வாறு
செய்தேன்’ என்றார்.
இச்சொல் கேட்டு, மனம் இரங்கிய மன்னராகிய இடங்கழியார் ‘எனக்கு
நீரன்றோ பண்டாரம்’ (செல்வக்களஞ்சியம்) எனச் சொல்லிப் பாராட்டி, ‘இப்போதே
எனது நெற்களஞ்சியத்தை மட்டுமின்றி நிதிக்களஞ்சியத்தையும் திறந்து
வைக்கிறேன். அனைவரும் வந்து விரும்பியதை எடுத்துக்கொள்க!’ என
நாடெங்கும் பறைஅறிவித்தார்.
அருள்வேந்தராகிய இவரே தன் இன்கருணையால் நெடுங்காலம்
அரசுபுரிந்து பின்னர்ச் சிவபதம் அடைந்தார்.
இவரது குருபூஜை திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரம்