கலைமாமணி,

முனைவர்.கு.ஞானசம்பந்தன்,

தகைசால் பேராசிரியர்,

தியாகராசர் கல்லூரி,

மதுரை-9

 

பன்முகத் திறமையாளர்  : பேராசிரியர், மேடைப்பேச்சாளர், நூலாசிரியர், நேர்முக வர்ணனையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர்,  திரைப்பட மற்றும்  சின்னத்திரை நடிகர்

சொந்த ஊர்          :               சோழவந்தான், மதுரை மாவட்டம்

பிறந்த தேதி        :               17.05.1956

கல்வித்தகுதி       :               எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., டி.ஜி.டி., டி.ஜே.,

கற்பித்தல் அனுபவம்       :               29 ஆண்டுகள்

முனைவர் பட்ட ஆய்வு   :               “சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரின் தமிழ்ப்பணி”

சிறப்புப் பட்டங்கள்         :

1. “தமிழ் இலக்கியத்தின் சிற்றரசு”

–  டாக்டர். கலைஞர் வழங்கியது, 1995

2. “உவகைப் புலவர்”

– அமெரிக்கத் தமிழ்ச்ங்கங்கள் வழங்கியது, 2003

3. “கலைமாமணி விருது”

– டாக்டர்.ஜெ.ஜெயலலிதா வழங்கியது, 2005

4. “மகாகவி பாரதியார் விருது”

– டாக்டர்.ஜெ.ஜெயலலிதா வழங்கியது, 2014

5. “நற்றமிழ் நாவலர்”

– திருவாவடுதுறை ஆதீனம், பிப்.2014

6. “தமிழாகரர்”

– குன்றக்குடி ஆதீனம் வழங்கியது, அக்.2014

7. “பண்டிதமணி”

– குவைத் பாவேந்தர் கழகம் வழங்கியது, 2015

8. “வாழ்நாள் சாதனையாளர் விருது”

– பெர்ல் ஃபவுண்டேசன், 2016

9. “தமிழ் மரபுக் காவலர் விருது”

– கனடா தமிழ்ச் சங்கம், 2021

 

கல்விப் பணி

தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29 ஆண்டுகளாக பேராசிரியப் பணி ஓய்விற்குப் பிறகு 6 ஆண்டுகள் தகைசால் பேராசிரியப் பணி

ஆய்வு வழிகாட்டலில் பட்டம் பெற்றவர்கள்(1991 – 2014)                :

இளம் ஆய்வாளர் (எம்.ஃபில்) 65பேர்

முனைவர் பட்டம் (பிஎச்.டி)         16பேர்

பங்கேற்ற ஆய்வரங்கங்கள்                            : 200

ஆய்வுக் கட்டுரைகள்                                       : 500

நூல் முன்னுரைகள்                                          : 500

புதிய நூல் அறிமுகங்கள்                 : 500

 

தியாகராசர் கல்லூரித் தமிழிசை ஆய்வு மையம் மற்றும் அமெரிக்கத் தொழிலதிபர் பால்.சி.பாண்டியன் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து இன்றுவரை செயல்பட்டு வருதல். 2012-2013ஆம் கல்வியாண்டில் தியாகராய கல்லூரியில் ‘தமிழிசை ஆய்வு மையம்’ தொடங்கப்பட்டது. இவ்வாய்வு மையத்தில் பழந்தமிழ்ப் பண்ணிசை பாக்கள் கி.பி.2ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழிசைப் பண்கள் பாடல் வடிவில் தொகுக்கப்பட்டு ஒலி நாடாக்களாக 2019ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

இத்தமிழிசை மையத்தில் வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், பரதம், வயலின் போன்றவையும் தகுதி வாய்ந்த இசை ஆசிரியர் மூலம் மாணவ மாணவியருக்கு இலவசமாகச் சான்றிதழ் படிப்பும், பட்;டயப் படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

வழிகாட்டலில் வெளிவந்துள்ள இளநிலை ஆய்வுகள் மொத்தம் -65 அவற்றில் சில

  1. அமலகுரு சதகத்தில் கிறித்துவக் கொள்கை
  2. கல்கியின் சிவகாமி சபதத்தில் துணைநிலைப் பாத்திரங்கள்
  3. தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள்
  4. உடுமலை நாராயணசுவாமி பாடல்களில் மறுமலர்ச்சிச் சிந்தனைகள்
  5. குறுந்தொகை காட்டும் சமுதாயம்
  6. பாரதியார் கவிதைகளில் உவமை
  7. வில்லிபாரதத்தில் திருமால் வாழ்த்துப் பாடல்கள்
  8. சேரமான் பெருமாள் நாயனாரின் பொன் வண்ணத்து அந்தாதி
  9. வில்லிபாரதத்தில் வை.மு.கோ.வின் இலக்கிய, இலக்கண உரைத்திறன்
  10. உசிலம்பட்டி வட்டாரப் பெண் தெய்வங்கள்
  11. சிதைவுகள்-புதினத்தில் சமுதாயச் சிந்தனைகள்
  12. தமிழ்ச் செல்வன் கதைகளில் சமூகப் பார்வை
  13. கள்ளிக்குடி வட்டாரச் சிறு தெய்வங்கள்

 

வழிகாட்டலில் வெளிவந்துள்ள முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மொத்தம் -16 அவற்றில் சில

  1. காலம் தோறும் திருவிளையாடல் புராணம்
  2. தமிழ் இலக்கியங்களில் நெய்தல் நில வாழ்வியலும் சமூக உறவுகளும்
  3. பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் சங்க இலக்கிய உரைநுட்பம்
  4. இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும்
  5. இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் வரலாறும் சமுதாயமும்
  6. சங்க இலக்கியத்தில் நீரும் நீர் மேலாண்மையும்

 

கல்லூரிப் பேராசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி முகாமில்….

  1. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறையில் ஓலைச்சுவடி கட்டுரை அளித்தது
  2. 7முறை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியது.
  3. மூன்றுமுறை விவேகானந்தர் கல்லூரியின் புத்தொளிப் பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றியது.
  4. அகாதமி ஸ்டாப் கல்லூரி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் – 10முறை பங்கேற்பு
  5. சங்க இலக்கியப்பயிற்சிக் கருத்தரங்கங்கள் -10 முறை பங்கேற்பு

 

ஊடகப் பணிகள்

தொலைக்காட்சி நிகழ்வுகள்

ஜெயா டிவி

12.06.2000 முதல் 2018 வரை ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் இன்றைய சிந்தனை, சிந்திக்க சில நிமிடங்கள் என்ற தலைப்புகளில் காலை 08:20 மணிக்கு சிந்தனை உரை மற்றும் பட்டிமன்றங்கள், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திரதினம், தீபாவளி, தமிழர்த் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

 

நேர்முகங்கள்

எழுத்தாளர் சுஜாதாவுடன் சிறப்புப் பேட்டி

கமலும் நானும்

 

நேர்முக வர்ணனை

மதுரை சித்திரைத் திருவிழா, திருவண்ணாமலை தீபத்திருவிழா, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா, திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, திருவில்லிப்புத்தூர், ஆடித்திருவிழா

‘ஆஸ்ட்ரோ’ வானவில் தொலைக்காட்சி – கோலாலம்பூர்(மலேசியா) தைப்பூசத் திருவிழா (5முறை)

 

விஜய் டிவி

2019முதல் விஜய் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராகவும் மற்றும் குக் வித் கோமாளி என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்பு.

 

தொலைக்காட்சித் தொடர்கள்:

சரவணன் மீனாட்சி(விஜய் டிவி)

தமிழ்ச்செல்வி (சன் டிவி)

திருமதி ஹிட்லர் (ஜீ தமிழ்)

புதுயுகம் மற்றும் புதியதலைமுறை தொலைக்காட்சிகளில் பண்பாட்டுத் திருவிழாக்களுக்கான கலந்துரையாடல்.

 

வானொலிப் பேச்சுகள்:

100க்கும் மேற்பட்ட தலைப்புகளில்          – (மதுரை, கோடைப் பண்பலை, திருச்சி,  கோவை,   சென்னை, திருநெல்வேலி, தருமபுரி, பாண்டிச்சேரி, காரைக்கால் வானொலி நிலையங்களில்)

விருத்தாச்சலம் கடலூர்   – நேருக்கு நேர் – நேயர்கள் முன்னிலையில்

திருவண்ணாமலை           – கார்த்திகை தீபம்

(மலை மேலிருந்து நேர்முக வர்ணனை)

தீபாவளிச் சிறப்பு வெடிகள்           – சென்னை வானொலி

நகைச்சுவைப் பட்டிமன்றம்          – சென்னை வானொலி

பட்டிமன்ற வரலாறு        – பேட்டித் தொகுப்பு, மதுரை வானொலி

நாட்டுப்புறக் கருத்தரங்கம்            – மதுரை வானொலி

இதயத்தின் சங்கீதம்         – (நகைச்சுவைப் பேச்சு)

மலர்முகம் – மதுரை வானொலி

பட்டிமன்றங்கள் – கோடைப் பண்பலை

தொலைபேசி நேர்முகம் – மதுரை வானொலி, சென்னை வானொலி

மகரந்த மண்டபம்            – கோவை வானொலி

ஒரு மாதத் தொடர்பேச்சு – திருநெல்வேலி

ரேடியோ மிர்ச்சி – கதை கேளு கதை கேளு 2012 முதல் 2015 வரை

 

அச்சு ஊடகங்களில்

 

  1. தினமணி          – தீபாவளிச் சிறப்பிதழ் கட்டுரை, உன்னோடு போட்டி    போடு (தன்னம்பிக்கைத் தொடர் இளைஞர் மணியில் – 52 வாரங்கள்)
  2. தினமலர் – சிட்டி பீட், ஜி.யு.போப் லண்டன் பயணக்கட்டுரை
  3. தினத்தந்தி – ஜெயிக்கப்போவது நீதான் (தன்னம்பிக்கைத் தொடர் – 40வாரங்கள்)
  4. மதுரை மணி – தீபாவளி மலர்
  5. தினகரன்                                                           – தீபாவளிச் சிறப்பிதழ் (வாங்க சிரிக்கலாம் தொடர் கட்டுரை)
  6. ஜுனியர் விகடன்                                          – வி.ஐ.பி. காது
  7. கணையாழி                                                     – சுஜாதா (கணையாழியின் கடைசிப்பக்கம்)
  8. சிரிப்பு                                                                               – மாதஇதழ் பொறுப்பாசிரியர் – 8ஆண்டுகள்
  9. ஆனந்தவிகடன்                                             – சிறப்புப் பேட்டி
  10. சுட்டி விகடன்                                              – உலகம் உங்கள் கையில்
  11. இந்தியா டுடே                                             – தீபாவளிச் சிறப்பிதழ் – சிறப்புக் கட்டுரை
  12. தி இந்து                                                          –
  13. மஞ்சரி மாத இதழ்                                      – கேள்வி – பதில் (2009முதல்)

 

பொதுமேடைகள்

1983 முதல் 2021 வரை 5000க்கும் மேற்பட்ட மேடைப்பேச்சுகள் (தனிப்பேச்சு, பட்டிமன்றம், வழக்காடு மன்றங்கள், கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆண்டு விழாக்கள்

 

மின்ஊடகம்:

மின்ஊடகமான யூடியூபிலும் 2018முதல் கு.ஞானசம்பந்தன் என்ற பக்கத்தின் மூலம் 1200க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் 1,50,000 சந்தாதாரர்கள்

பிற மின் ஊடகங்களான முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்.

 

சமுதாயப் பணிகள்

நகைச்சுவை மன்றங்கள்

தலைவர் – நகைச்சுவை மன்றம், மதுரை (1991 முதல்)

தொடங்கியுள்ள நகைச்சுவை மன்றங்கள் – புரவலர்

1.திண்டுக்கல் நகைச்சுவை மன்றம்

2.அருப்புக்கோட்டை நகைச்சுவை மன்றம்

3.இராமநாதபுரம் நகைச்சுவை மன்றம்

4.கோவை நகைச்சுவை மன்றம்

5.திருச்சி நகைச்சுவை மன்றம்

6.சிவகங்கை நகைச்சுவை மன்றம்

7.கோவில்பட்டி நகைச்சுவை மன்றம்

8.நாகர்கோவில் நகைச்சுவை மன்றம்

9.ஈரோடு நகைச்சுவை மன்றம்

10.சென்னை நகைச்சுவை மன்றம்

11.பரமக்குடி நகைச்சுவை மன்றம்

12.திருப்பூர் நகைச்சுவை மன்றம்

13.உடுமலைப்பேட்டை நகைச்சுவை மன்றம்

14.சேலம் நகைச்சுவை மன்றம்

15.திருநெல்வேலி நகைச்சுவை மன்றம்

அயலகத்தில் அமெரிக்காவில் டாலஸ் மாநகரத்தில் டாலஸ் நகைச்சுவை மன்றம் (2019)

 

நகைச்சுவை மன்றப் பணிகள்:

அனைவரும் மாதந்தோறும் கூடி மகிழும் வகையில், நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றம், நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு நிதி உதவி செய்தல், சிறந்த நகைச்சுவையாளர்களுக்கு விருது வழங்குதல், குழந்தைகளை ஊக்குவித்தல், சிரிப்பு மாத இதழின் பொறுப்பாசிரியர்.

 

தன்முன்னேற்றிப் பயிற்சிப் பட்டறைகள்:

1.ஜெயித்துக் காட்டுவோம்                                            – தினமலர் (2000ஆம் ஆண்டு முதல்)

2.வழிகாட்டி                                                                       – தினமலர் (2000ஆம் ஆண்டு முதல்)

3.வெற்றி வாசல்                                                – நமது நம்பிக்கை – கோவை

(2005ஆம் ஆண்டு முதல்)

4.அறிமுகப் பயிற்சி வகுப்புகள்                    – தியாகராசர் பொறியியல் கல்லூரி

(2015ஆம் ஆண்டு முதல்)

 

தமிழ்முறைத் திருமணங்கள்:

500க்கும் மேற்பட்ட தமிழ்முறைத் திருமணங்கள் தலைமையேற்று நடத்தி வருதல்.

 

கௌரவப் பணிகள்

1.நாட்டுப்புறப் பாடல் தேர்வுக்குழு                           – அகில இந்திய வானொலி உறுப்பினர்

2.ஆயுள் காப்பீட்டுக்கழகம்                                           – பாலிஸிதாரர்கள் – கூட்டமைப்புக் குழு

உறுப்பினர் (1988 – 2000)

3.துணைவேந்தர் நியமனக் குழு உறுப்பினர்

(அரசு நியமனம்)                                                              – 2015ஆம் ஆண்டு

4.மதுரை மாநகராட்சி தூய்மைத் தூதுவர்  – 2018ஆம் ஆண்டு

 

அயல்நாடுகளில் தமிழ்ப்பணிகள்

  1. 2001 – ஜனவரி14 – மலேசியா – கோலாலம்பூரில் தமிழர் திருநாள் – சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தில் சொற்பொழிவு
  2. 01.07.2001 சிங்கப்பூர் – தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் திருக்குறள் விழாவில் கருத்துரை
  3. கோலாலம்பூர், பினாங்கு – பட்டிமன்றங்கள்
  4. அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களில் – பேச்சு (03.07.2003 முதல் 30.07.2003 முடிய, 2005 முதல் 2021)
  5. மலேசியா – பாரதிதாசன் தமிழர் இயக்கம், எழுத்தாளர் சங்கத்தில் கருத்துரை (ஜுன்27, 2004)
  6. அமெரிக்கா – ஹ{ஸ்டன், டெக்ஸாஸ், சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி – சொற்பொழிவு, பட்டிமன்றம், கருத்துரை (2011 – 2012)
  7. சிங்கப்பூர் – தமிழ் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி (2011 – 12)
  8. சிசெல்சு தமிழ்ச்சங்கத்தில் கருத்துரை (2013)
  9. சிகாகோவில் நடைபெற்ற 10வது உலகத்தமிழ் மாநாடு (2019)
  10. வா~pங்டனில் திருக்குறள் கருத்தரங்கப் பங்கேற்பு (2006)

 

கல்லூரிப் பொறுப்புக்கள்:

1.கவின் கலைக்கழகம் (குiநெ யுசவள ஊழnஎநழெச) பொறுப்பாளர் (1988 – 90)

2.தியாகராசர் செய்திமடல் – இதழ் பொறுப்பாசிரியர் (1988 – 1997)

3.கல்லூரிக்குழு (ஊழரnஉடை) உறுப்பினர் (2000)

4.கல்லூரி ஆசிரியர் சங்கச் செயலர் (ளுவயகக ளுநஉசநவயசல) (1988இ 2000)

5.கல்லூரி ஆண்டு மலர் பொறுப்பாசிரியர் (2002 – 2003)

6.கல்லூரியின் பழைய மாணவர் சங்கச்செயலர் (2012 – 2013)

 

சொற்பொழிவாற்றிய தமிழ்ச்சங்கங்கள்

இந்தியத் தமிழ்ச் சங்கங்கள்

1.தில்லித் தமிழ்ச்சங்கம்

2.கல்கத்தா தமிழ்ச்சங்கம்

3.பம்பாய்த் தமிழ்ச்சங்கம்

4.ஹைதராபாத் தமிழ்ச்சங்கம்

5.மதுரைத் தமிழ்ச்சங்கம்

6.திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்

7.அந்தமான் தமிழ்ச்சங்கம்

8.கோழிக்கோடுத் தமிழ்ச்சங்கம்

9.கோவா தமிழ்ச்சங்கம்

 

அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள்:

நியூயார்க், நியூஜெர்ஸி, வா~pங்டன், புளோரிடா, மிசிசிப்பி, கலிபோர்னியா, அட்லாண்டா, டாலஸ், டெக்சாஸ்

 

அயல்நாட்டுத் தமிழ்ச்சங்கங்கள்:

சவுதி, குவைத், ஜெட்டா, சிங்கப்பூர், நார்வே, கனடா, பாரிஸ், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்(சிசெல்சு), துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை, ர~;யா, ஜப்பான், கத்தார், ஹாங்காங், மஸ்கட், இலண்டன், மலேசியா தமிழ்ச்சங்கங்கள்

 

எழுதியுள்ள நூல்கள்:

  1. வாங்க சிரிக்கலாம்
  2. பரபரப்பு சிரிசிரிப்பு
  3. பேசும் கலை (பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்)
  4. உலகம் உங்கள் கையில்
  5. இன்றைய சிந்தனை
  6. வாழ்வியல் நகைச்சுவை
  7. சினிமாவுக்குப் போகலாம் வாங்க
  8. கல்லூரி அதிசயங்கள்
  9. ஜெயிக்கப்போவது நீதான்
  10. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்
  11. சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்
  12. மேடைப் பயணங்கள்
  13. சந்தித்தம் சிந்தித்ததும்
  14. இலக்கியச் சாரல்
  15. கலகல கடைசிப் பக்கம்
  16. மஞ்சரி கேள்வி பதில்
  17. உன்னோடு போட்டி போடு
  18. தமிழ் வாசல்
  19. கற்றதைச் சொல்லவா! மற்றதையும் சொல்லவா!
  20. கடல் தாவிய கதாநாயகன்
  21. தொ.ப.வும் நானும்
  22. அரசஞ்சண்முகனாரின் தமிழ்ப்பணி

 

வெளியிட்டுள்ள குறுந்தகடுகள்:

  1. வாங்க சிரிக்கலாம் (1992)
  2. சிரிக்கலாம் வாங்க (1995)
  3. இலக்கியமும் நகைச்சுவையும்(2004)
  4. சிரிப்பும் சிந்தனையும்
  5. வெற்றி நம் பக்கம்
  6. ஜெயிக்கப் போவது நீதான்

 

நடித்துள்ள திரைப்படங்கள்:

  1. விருமாண்டி
  2. இதயத்திருடன்
  3. கைவந்த கலை
  4. ஆயுதம் செய்வோம்
  5. சிவா மனசுல சக்தி
  6. புகைப்படம்
  7. குனிமொழி
  8. போராளி
  9. குட்டிப்புலி
  10. பிரம்மன்
  11. நிமிர்ந்து நில்
  12. உத்தமவில்லன்
  13. கேரள நாட்டு இளம்பெண்களுடனே
  14. கொம்பன்
  15. பசங்க 2
  16. ரஜினி முருகன்
  17. மருது
  18. தொடரி
  19. பறந்து செல்ல வா
  20. கனவு வாரியம்
  21. ஆரம்பமே அட்டகாசம்
  22. தொண்டன்
  23. கடைசி பென்ச் கார்த்தி
  24. கொடி வீரன்
  25. விதி மதி உல்டா
  26. ஆருத்ரா
  27. சண்டகோழி 2
  28. பிகில்
  29. நாடோடிகள் 2
  30. சூரரைப் போற்று
  31. சத்ய சோதனை
  32. கண்ணை நம்பாதே
  33. பிஸ்தா 2
  34. பொன் மாணிக்கவேல்
  35. இடம் பொருள் ஏவல்

நடித்துக் கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகா~;, இயக்குநர் அ.வெங்கடேசன் ஆகிய 3 படங்கள்

 

இல்ல முகவரி :

“அமுதகம்” எண்.155, டெப்டி கலெக்டர் காலனி,

3வது தெரு, கே.கே.நகர்,

மதுரை – 625 020.

 

தொலைபேசி     : 0452-2581505

அலைபேசி         : 98424-52050

மின்அஞ்சல்        :humour.sambandan@gmail.com